Tuesday, October 26, 2010

அறுவடை

அந்த ஆலமரத்தின் நிழலில்

எங்களை இளைப்பாற அனுமதிக்காமல் இருந்திருக்கலாம்

ஆனால் அந்த ஆலமரத்தின்

வேர்கள் அந்த சுவற்றையும் தானடி

எங்கள் வீடுகளின் அடியில்

நாங்கள் சுவாசித்த காற்று அந்த சுவற்றையும் தாண்டி

உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள்

உங்களுக்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறது

உங்கள் தோட்டங்களில்

பயிர் வளர்த்ததற்கு பதிலாக

உங்கள் மனங்களில்

தீண்டாமையை உரம் போட்டு வளர்க்கிறீர்கள்

நாளை அறுவடை செய்யப் போவதும் அதுவேதான்

Tuesday, October 5, 2010

இருளியல்

இரவு மனிதனின் இன்னொரு முகத்தைக் வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது
மனிதனுக்கு இருள் இன்னொரு அருள் தரும் தெய்வம் தான்
இருட்டு மனிதனுக்கு நிம்மதியையும் அமைதியையும் தரும் என நினைக்கிறான்
அதோடு பயமும் பற்றிக்கொள்கிறது