சுவரை வைத்து அரசியலா?
இல்லை இல்லை
சுவர் வைத்து
எங்களை சிறைவைத்த அரசியல்
உத்தபுரம் சுவரும்
இன்னொரு
சிறைசாலைச சுவர் தான்
உயர் சாதி எனில்
உச்ச நீதியும் சாயும்
தாழ் சாதி எனில்
மிச்ச நீதியும் பாயும்
லத்திகள் என்ன
பாயாமலயிருக்கும்
கோமான்கள் அமர்ந்து
கோலோச்சிய பீடங்களில் எப்போதும்
இழி சாதியினரின் பலியிட்ட
ரத்தம் தான் வழியும் .
தீண்டாமைச் சுவர்
உத்தபுரத்தில் மட்டுமா இருக்கிறது
உங்கள் மனங்களிலும் தான்
Thursday, August 26, 2010
Sunday, August 22, 2010
மலரியல்
உன்
திங்கள் பார்வை
என்னுள் அல்லியாய்
பூக்கவைக்கிறது
காதல்
நீ
இருக்கும் வரை
அது வாடாத மலராய்
அது இருக்கும்
மௌனவியல்
எவ்வளவு பேசியும் முடியவில்லை
இனி உன் மௌனத்தை
எந்த சம்மட்டியால்
உடைக்க முடியும்
என
எனக்கு தெரியவில்லை
காதலியல்
தயவுசெய்து கண் சிமிட்டாதே
மின்னல் வெட்டுவது போலுள்ளது
அருகில் அமரு என
கரம் பிடித்து
இழுத்து இருக்கையில்
அமர்த்தினாய்
சந்திரமண்டலத்தில்
கால் வைத்தது போலிருந்ததது
அகத்தின் அழகு முகத்தில்
என்றான் கவிஞன்
உன் அகத்தில் என்ன உள்ளதென
எனக்கும் தெரியவில்லை
என் அகத்தில் உள்ள காதலும்
உனக்கும் தெரியவில்லை
Thursday, August 19, 2010
தலித்தியல்
ஆலயங்களுக்கு வெளியே
கழட்டிவிடப்படுகின்றன
செருப்புகளும் தலித்துகளும்
மாட்டு மூத்திரத்திற்கு
தரும் மரியாதை கூட
தலித்துக்களுக்குத் தருவதில்லை
வடம் பிடித்து இழுத்தாலும்
சேரிப்பக்கம் வராத சாமிய
என்ன மயித்துக்கு இழுக்கணும்
இந்தியா தீபகற்ப்பமல்ல
நான்கு வர்ணங்களால் சூழப்பட்ட
தீவு
கழட்டிவிடப்படுகின்றன
செருப்புகளும் தலித்துகளும்
மாட்டு மூத்திரத்திற்கு
தரும் மரியாதை கூட
தலித்துக்களுக்குத் தருவதில்லை
வடம் பிடித்து இழுத்தாலும்
சேரிப்பக்கம் வராத சாமிய
என்ன மயித்துக்கு இழுக்கணும்
இந்தியா தீபகற்ப்பமல்ல
நான்கு வர்ணங்களால் சூழப்பட்ட
தீவு
தேயிலையின் ரத்தம்
தேயிலை தோட்டங்களில்
வேலை செய்த தலித் தொழிலாளர்களின்
உயிரையும்
உறிஞ்சிக் குடித்த
மேல்குடி அட்டைகள்
விற்ற தேயிலையில்
வடிந்த தேநீரில்
கொஞ்சம் கொஞ்சமாக
நிறம் மாறும்
எங்கள் கருப்பு தலித்துகளின்
சிவப்பு ரத்தம்
வேலை செய்த தலித் தொழிலாளர்களின்
உயிரையும்
உறிஞ்சிக் குடித்த
மேல்குடி அட்டைகள்
விற்ற தேயிலையில்
வடிந்த தேநீரில்
கொஞ்சம் கொஞ்சமாக
நிறம் மாறும்
எங்கள் கருப்பு தலித்துகளின்
சிவப்பு ரத்தம்
சருகின் நினைவு
தாமிரபரணி ஆற்றில்
தூவும் அஞ்சலிப்பூக்கள்
சருகனாலும்
இருபத்தேழு உயிர்களின்
நினைவை சுமந்து செல்லும்
எப்போதும்
தூவும் அஞ்சலிப்பூக்கள்
சருகனாலும்
இருபத்தேழு உயிர்களின்
நினைவை சுமந்து செல்லும்
எப்போதும்
Subscribe to:
Comments (Atom)