சுவரை வைத்து அரசியலா?
இல்லை இல்லை
சுவர் வைத்து
எங்களை சிறைவைத்த அரசியல்
உத்தபுரம் சுவரும்
இன்னொரு
சிறைசாலைச சுவர் தான்
உயர் சாதி எனில்
உச்ச நீதியும் சாயும்
தாழ் சாதி எனில்
மிச்ச நீதியும் பாயும்
லத்திகள் என்ன
பாயாமலயிருக்கும்
கோமான்கள் அமர்ந்து
கோலோச்சிய பீடங்களில் எப்போதும்
இழி சாதியினரின் பலியிட்ட
ரத்தம் தான் வழியும் .
தீண்டாமைச் சுவர்
உத்தபுரத்தில் மட்டுமா இருக்கிறது
உங்கள் மனங்களிலும் தான்
No comments:
Post a Comment